இலங்கையில் இந்திய இராணுவத்தை தரையிறக்குமாறு கோரிக்கை
இலங்கையில் அரசமைப்பு பேணப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியா இராணுவத்தை அனுப்பவேண்டும் என சுப்பிரமணிய சுவாமி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கையில் மக்களின் சீற்றத்தை இந்தியாவிற்கு எதிரான வெளிநாட்டு சக்திகள் தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துகின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
India must send in the Indian Army to restore Constitutional sanity. At present anti Indian foreign forces are taking advantage of people’s anger. This affects India’s national security
— Subramanian Swamy (@Swamy39) May 10, 2022
இது இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றதாகவும் எனவே, இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
நேற்றையதினம் காலிமுக திடலில்அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட கோட்டா கோ ஹோம் கம போராட்டகாரகள் மீது இடம்பெற்ற தாக்குதலை அடுத்து பொதுமக்கள், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது வீடுகள் மற்றும் காரியாலயங்கள் என்பவற்றினை தீக்கிரையாக்கி வருகின்றனர்.
அந்தவகையில் முன்னாள் பிரதமர் மஹிந்தவின் இல்லம் நேற்றிரவு எரியூட்டப்பட்ட்து. இதனையடுத்து தப்பியோடிய மஹிந்த குடும்பம் திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையிலேயே இந்திய மூத்த அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமி மேற்கண்டவாறு டிவிட்டரில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.