கோட்டாபயவின் மாளிகையை தகர்ப்பதற்கு முன்னேறிப் பாயும் பல்லாயிரம் மக்கள் (நேரலை)
பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழையும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வானை நோக்கி அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
எனினும் ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள வீதித்தடைகளை அகற்றும் முயற்சி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். எ
னினும் போராட்டகாரர்கள் பின்வாங்காத நிலையில், தற்போது பொலிஸ் தடைகளை மீறி ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பிரதான நுழைவாயிலை ஆர்ப்பாட்டகார்கள் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.