பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை சந்தித்த கூட்டமைப்பினர்!
பிரித்தானிய தெற்காசிய, ஐ.நா. மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்குப் பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் தாரிக் அஹமட் பிரபுவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A. Sumanthiran) சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பானது நேற்று (25) வியாழக்கிழமை லண்டனில் வெளிவிவகார அமைச்சரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
மேலும் இச் சந்திப்புக் குறித்து அமைச்சர் தாரிக் அஹமட் (Tariq Ahmad) டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார். ‘இன்று எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்ததில் மகிழ்வடைகின்றேன். மனித உரிமைகளைப் பேணுவது, பிணக்குக்குப் பின்னரான பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகியவற்றோடு அனைத்து சிறுபான்மையினரதும் உரிமைகளை மதிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் கலந்துரையாடி னோம்.’ என்று அந்த டுவிட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
It was a pleasure to meet with M.A Sumanthiran today. We discussed upholding human rights, post conflict accountability and reconciliation, as well as the importance of respecting the rights of all minorities @TNAMediaOffice. pic.twitter.com/QGr5cnXci8
— Lord (Tariq)Ahmad of Wimbledon (@tariqahmadbt) November 25, 2021
இச் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியனும் (Shanakiyan Rasamanickam) கலந்து கொண்டார்.
சுமார் ஒருமணிநேரம் இக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.