மலை மீது தீபம்; சிக்கலில் சின்னத்திரை நடிகை அர்ச்சனா
சின்னத்திரை நடிகை அர்ச்சனா, அண்ணாமலையார் தீபமலை மீது தடையை மீறி ஏறிச்சென்று அங்கு புகைப்படங்கள், வீடியோக்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி அதில், பொதுமக்களை மலை ஏறுவதை ஊக்குவிக்கும் வகையில் பதிவும் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை நடிகை அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர்.

வனத்துறையினர் விசாரணை
சமூக வலைதளங்களில் இந்த பதிவு வைரலாகி வருவதால் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், மலை மீது சின்னத்திரை நடிகை அர்ச்சனா மட்டும் தனியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதால், அவருக்கு உதவியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேசமயம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் உள்ள மலை மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தீபத் திருவிழாவின் போதும் பக்தர்கள் மலை ஏறுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.
சின்னத்திரை நடிகை அர்ச்சனா சீரியலில் பிரபலம் ஆனதை விட அவர் பிக் பாஸ் ஷோ மூலமாக பிரபலம் ஆனது தான் அதிகம். அவர் பிக் பாஸ் 7 ஆம் சீசனில் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது.