டிப்பர் விபத்து ;சாரதியும் உதவியாளரும் படுகாயம்!
பால் சேகரிப்பதற்காகப் பயணித்த டிப்பர் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்ததில், சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (14) இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தின் மத்திய பிரிவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் வாகனம், குறுகிய வளைவொன்றைக் கடக்க முற்பட்டபோது வீதியை விட்டு விலகி சுமார் 25 அடி பள்ளத்திலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இருவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் டிப்பர் வாகனம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.