காலம் இருக்கிறது சீமான்!
இந்த தேர்தலில் அதிமுக தோல்வி, திமுக வெற்றி ஆகியவற்றை தாண்டி கவனிக்கப்படவேண்டியது நாம்தமிழர் கட்சி வாங்கிய ஓட்டுகள் . இன்னும் ஒட்டு எண்ணிக்கை முழுமை பெறாவிட்டாலும் கள நிலவரப்படி கிட்டத்தட்ட 45 லட்சம் வாக்குகள் NTK வாங்க வாய்ப்பு உள்ளது.
இரண்டாவது சட்டமன்ற தேர்தல் இவர்களுக்கு. 8 % ஓட்டுகள் மேல் வாங்கினால் இனி NTK அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கட்சியாக தேர்தல் கமிஷன் அறிவிக்கும். மேலும் விவசாயி சின்னம் நிரந்தரமாகும். தேர்தலுக்கு தேர்தல் சின்னம் மாறும் தொல்லை இனி இருக்காது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது ஒரு பைசா கூட வாக்காளர்களுக்கு தரவில்லை என்பதே. மேலும் பலரும் வற்புறுத்தியும் யாருடனும் கூட்டணி சேரவில்லை.
இதைவிட முக்கியம் , தமிழக தேர்தல் வரலாற்றில் யாரும் செய்யாதது. அதுதான் சரிசமமாக 117 பெண் வேட்பாளர்களை அறிவித்தது. சீமானும் உலகாள்பவர்களால் இயக்கப்படுபவரே என்ற குற்றச்சாட்டும் உள்ளது. அதுவும் கவனிக்க படவேண்டியது. ஆனாலும் எதிர்காலத்தில் இவர்களின் செயல்பாடுகள்தான் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும். சீமானும் தன் தொகுதியில் தோற்க போகிறார்.
ஆனாலும் எதிர்காலத்தை உங்களுக்கு சாதகமாக்கி கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
காத்திருங்கள் சீமான் காலமும், வயதும் உங்களுக்கு இருக்கிறது . காலம் ஒருநாள் கைகூடும்.
முகநூல் பதிவில் இருந்து...