தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய டிக்டொக்; பயனர்கள் அவதி
உலகளாவிய ரீதியில் பிரபலமான டிக்டொக் (TikTok) சமூக வலைத்தளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைக் காரணமாகப் பெருமளவிலான பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்டொக் சேவையின் செயலிழப்பு தொடர்பாக 25,000க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

71 சதவீதமான முறைப்பாடுகள்
அவற்றில் 71 சதவீதமான முறைப்பாடுகள் டிக்டொக் கையடக்கத் தொலைபேசி செயலியில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவைத் தடை இரண்டு மணித்தியாலங்களுக்கும் குறைவான நேரம் நீடித்ததாக Downdetector இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
குறித்த தொழில்நுட்ப பிரச்சினை தற்போது முழுமையாகச் சீர்செய்யப்பட்டுள்ளதாக டிக்டொக் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகப் பயனர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்காக மன்னிப்புக் கோருவதாகவும் டிக்டொக் நிறுவனம் தெரிவித்துள்ளது.