அடுத்த மாதம் முதல் கடுமையாக்கப்படவுள்ள நடைமுறை!
தனியார் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குவதும் பெறுவதும் கட்டாயமாக்கப்படும் என மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இந்த நடவடிக்கை கட்டாயமாக்கபப்ட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை
மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் காமினி ஜெயசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் கூறுகையில், பயணச்சீட்டு வழங்காத நடத்துநர்கள் மற்றும் பயணச் பயணச்சீட்டுகளைப் பெறாத பயணிகள் மீது சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
பயணிகள் பேருந்துகளில் ஜிபிஎஸ் சாதனங்கள் பொருத்தப்படும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.