பிள்ளைகள் கல்வியில் சிறக்க வியாழ கிழமைகளில் இதனை செய்யுங்கள் !
குருவருள் இருந்தால், திருவருள் தானே கிடைக்கும் என்பார்கள் . குருபகவானுக்கு உகந்த நாளாக வியாழக்கிழமை உள்ளது.
அதுமட்டுமல்லாது வியாழக்கிழமை அன்று ஷீரடி சாய்பாபா, ராகவேந்திரர், ராமானுஜர், தட்சிணாமூர்த்தி ஆகியோரை சென்று வழிபடுவது சாலச்சிறந்தது என கூறப்படுகின்றது. குரு என்பவர் தெய்வத்திற்கும் மேலானவர்.
அவருடைய அருளை பரிபூரணமாக பெற வேண்டும். குழந்தைகள் படி, வேலை, பதவி உயர்வு தொடர்பான உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற வேண்டும்.
வேண்டுதல்கள் நிறைவேற....
வாழ்வில் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேற வேண்டும் என்றால் வியாழக்கிழமையில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வியாழக்கிழமையில் ஏதாவது ஒரு கோவிலுக்கு அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக் கொடுக்கலாம். பிறந்தநாள், திருமண நாள் ஆகியவற்றிற்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்பவர்கள் வியாழக்கிழமையில் செய்வது சிறப்பானதாக இருக்கும்.
பல நாட்களாக காத்திருந்தும், முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை என்பவர்கள் வியாழக்கிழமையில் சிவன் கோவிலுக்கு சென்று, சிவனை பார்த்து விட்டு, பிறகு தட்சிணாமூர்த்தியை சென்று பார்த்து உங்களின் வேண்டுதலை சொல்லி பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.
இது போல் தொடர்ந்து செய்தால் விரைவில் உங்களின் வேண்டுதல் நிறைவேறும்.