சிகை அலங்கார நிலையத்தில் இளைஞர்களின் மோசமான செயல்; பொலிஸார் அதிரடி நடவடிகை!
கெக்கிராவ பஸ் நிலையத்திற்கு அருகில் சிகை அலங்கார நிலையம் நடத்தும் போர்வையில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300,000 ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கெக்கிராவ, கரம்பவத்த பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இரு இளைஞர்களும், கெக்கிராவ, வலவ பகுதியைச் சேர்ந்த 26 வயதான ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின்படி, கெக்கிராவ பஸ் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் மூவரிடமிருந்தும் 15 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.