லொறிகளுடன் மோதிய முச்சக்கரவண்டி; பிக்குனிகள் காயம்
சூரியவெவ, நுகேகந்த பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இரண்டு லொறிகளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று பிக்குணிகள் படுகாயமடைந்த நிலையில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளை வீதியிலிருந்து வந்த முச்சக்கரவண்டி திடீரென பிரதான வீதிக்குள் நுழைய முற்பட்டபோது, பிரதான வீதியில் வந்த லொறியுடன் மோதியதுடன், வீதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு சிறிய லொறியுடனும் மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.
முச்சக்கரவண்டி சாரதியின் கவனக்குறைவான வாகனம் செலுத்துதலே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் முச்சக்கரவண்டி சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.