வவுனியாவில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கர விபத்து!
வவுனியாவில் இரண்டு பேருந்துகள் உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (23-01-2023) மதியம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தினை ஆரம்பித்த வவுனியா – கொழும்பு 15 வழித்தட தனியார் பேருந்தும் வவுனியா – கொழும்பு 87 வழித்தட தனியார் பேருந்தும் இருவருடைக்கிடையே போட்டித்தன்மை காரணமாக பயணித்துள்ளார்.
பழைய பேருந்து நிலையத்தினை இரு பேருந்துகளும் அண்மித்த சமயத்தில் இரண்டாம் குறுக்குத்தெரு வீதியுடாக கண்டி பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கிலோன்று ஏற முற்பட்டமையினையடுத்து வவுனியா – கொழும்பு 15 வழித்தட தனியார் பேருந்து திடீரென பேருந்தினை நிறுத்தியுள்ளார்.
அதன் பின்புறமாக வந்த வவுனியா – கொழும்பு 87 வழித்தட தனியார் பேருந்து முன்பாக நின்ற பேருந்துடன் மோதுண்டதுடன் முன்பாக நின்ற பேருந்து வீதியினை மாற முற்பட்ட மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.
இவ்விடயத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவர் காயங்களுக்குள்ளாகியிருந்தமையுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்திருந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.