மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை! பொலிஸார் வெளியிட்ட தகவல்
மலேசியா, செந்தூலில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நிலையில் மீட்கப்பட்டஇலங்கையர்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்தி மூச்சுத் திணறிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
செந்துல் பொலிஸ் தலைமை உதவி ஆணையர் அஹ்மத் சுகர்னோ முகமட் ஜஹாரி இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் கொலைக்கான காரணத்தை பொலிஸ் இன்னும் கண்டறியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகரகம்
இந்த விடயம் தொடர்பில் இலங்கை உயர்ஸ்தானிகரகத்துக்கு தாம் அறிவித்துள்ளதாக சுகர்னோ தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இலங்கை உயர்ஸ்தானிகரகம் இன்னும் புதுப்பிப்பிக்கப்பட்ட தகவல்கள் எதனையும் வழங்கவில்லை முன்னதாக, கடந்த வார இறுதியில் செந்தூல், கம்போங் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இந்த மூன்று இலங்கையர்களும் கை, கால்கள் கட்டப்பட்டு, தலைகள் பிளாஸ்டிக்கினால் மூடப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டனர்.
சண்டையினால் ஏற்பட்டதாகக் கருதப்படும் அலறல்களின் பின்னர் இந்த உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றில் ஒன்று நிர்வாணமாக இருந்தது.
இந்த நிலையில் இந்த கொலைகளுக்கு காரணம் என்று கருத்தப்படும் இரண்டு இலங்கையர்களை மலேசிய பொலிஸார் தேடி வருகின்றனர்.