யாழ்ப்பாண நீதிபதிகள் மூவருக்கு இலங்கையில் கிடைத்த உயரிய அந்தஸ்து
யாழ்ப்பாண நீதிபதிகளில் மூவர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றுள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக 18 பேர் நியமிக்கப்பட்டு நியமனக் கடிதங்கள் நேற்று (3) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வழங்கி வைக்கப்பட்டன.
மேல் நீதின்ற நீதிபதி
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் மாவட்ட நீதிபதிகளாகவும் நீதவான் நீதிமன்ற நீதிபதிகளாகவும் கடமையாற்றிய நீதிபதிகளான A.A. ஆனந்தராஜா , அந்தோனிப்பிள்ளை யூட்சன் மற்றும் கஜநிதிபாலன் ஆகியோர் மேல் நீதின்ற நீதிபதிகளாக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 111ஆவது அரசியலமைப்பின் (2) ஆவது உப பிரிவின்படி, ஜனாதிபதியினால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதன் போது விசேட தர நீதித்துறை அதிகாரிகள் 17 பேரும் மற்றும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் பணியாற்றும் சிரேஷ்ட அரசதரப்பு சட்டத்தரணி ஒருவரும் இவ்வாறு மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.