முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயம்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் பங்கலாவத்த பகுதியில் இன்று (08) பிற்பகல் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் மிகவும் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில் தலவாக்கலை பகுதியில் இருந்து உடப்புசல்லாவ நோக்கி பயணம் மேற்கொண்ட முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை இழந்தமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
விபத்தில் முச்சக்கர வண்டி அதிக சேதம் ஏற்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
