தீ விபத்தில் சிக்கிய மூன்று வீடுகள் ; நொடியில் தப்பிய உயிர்கள்
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீதும்பிட்டிய தோட்டத்தில் உள்ள மூன்று வீடுகளைக் கொண்ட தொடர் குடியிருப்பொன்றில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ஏற்பட்ட தீயினால் குறித்த குடியிருப்பின் ஒரு வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன், அங்கிருந்த அனைத்துத் தளபாடங்களும் தீக்கிரையாகியுள்ளன.

மேலதிக விசாரணை
எனினும், தீ பரவிய வேளையில் குறித்த வீட்டில் வசிக்கும் தாயும் சிறுவனும் வீட்டுக்கு முன்னால் உள்ள சிறிய அறையொன்றில் இருந்தமையால் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து விரைவாகச் செயற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
இந்தத் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.