ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி மூவர் உயிரிழப்பு
ரயிலுடன் முச்சக்கர வண்டி மோதி மூவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
இச் சம்பவம் வெலிகம, பெலேன ரயில் கடவையில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் பாடசாலை மாணவர்கள் இருவரோடு முச்சக்கரவண்டி சாரதியும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம் பெற்ற விபத்து
மாத்தறையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலே நேற்று பிற்பகல் இவ்வாறு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முச்சக்கர வண்டியில் தாய் உட்பட 9 மற்றும் 7 வயதுடைய இரு பிள்ளைகள் பயணித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அத்தோடு இதில் 12 வயதுடைய பிள்ளையும் அவருடைய தாயும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவர்கள் வெலிகம மோதரவத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.