காவன்திஸ்ஸ யானையின் வயிற்றிலிருந்த மூன்று தோட்டாக்கள்
காவன்திஸ்ஸ யானையின் வயிற்றிலிருந்து மூன்று தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக, மஹவ நீதவான் நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, யானையை சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான விசாரணையை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்குமாறு மஹவ நீதவான் அனுருத்திகா செனவிரத்ன உத்தரவிட்டார்.
பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்த நீதவான், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சந்தேக நபர்களையும் அடுத்த நீதிமன்றத் திகதியில் சாட்சியங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதற்கமைய சந்தேக நபர்கள் நவம்பர் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பி.பி.எம்.ஏ. விஜேசுந்தரவினால் இந்த இடைக்கால பிரேத பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.