மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் விபச்சார விடுதிகள்; 8 பெண்கள் உட்பட 9 பேர் கைது
மொறட்டுவெல்ல தெற்கு பிரதேசங்களில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் மூன்று விபச்சார விடுதிகள் அடையாளம் காணப்பபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த இடத்தில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 8 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொறட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது பாலியல் தொழில் விடுதிகளை நடத்திய இரண்டு பெண்கள், ஒரு ஆண் மற்றும் மேலும் 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்ட பெண்கள் 24 முதல் 49 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தெஹிவளை, பிட்டகோட்டே, தொடங்கொடை, அம்பாறை, கல்கிஸ்சை, பரகஸ்தோட்ட, அகலவத்த, பெந்தோட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் இன்று மொறட்டுவை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.