எம்.பி யின் வீட்டுக்கு தீ வைத்த மூவர் கைது
மே 09 ஆம் திகதி பொது அமைதியின்மையின் போது ஹோகந்தரவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் இல்லத்தை தாக்கி தீ வைத்த குற்றச்சாட்டில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலபே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோகந்தரவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலுள்ள சொத்துக்களை சந்தேக நபர்கள் அழித்துள்ளதுடன் வீட்டுக்கும் தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் நேற்று ஹோகந்தர பகுதியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் 18, 36 மற்றும் 38 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.