பாடசாலை அதிபரோடு தகராறில் ஈடுபட்ட மூவர் கைது
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி சரஸ்வதி வித்தியாலய அதிபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மூவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் வட்டுக்கோட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டில் கடந்த சில நாட்களாக வசித்து வருகிறார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த குறித்த நபரும் மேலும் இருவர் பாடசாலைச் சுவரில் நுழைந்து அதிபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பழைய மாணவர்கள் அறிந்ததும் இருவரும் தப்பியோடிய நிலையில் பழைய மாணவர் ஒருவர் பிடிபட்டார்.
கைதானவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து மேலும் இரு சந்தேக நபர்கள் இன்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களிடமும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.