யாழ் சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு வந்த அச்சுறுத்தல்; படையினர் குவிப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் இன்றைய தினம் (29) காலை முதல் பொலிஸ், மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு தாக்குதல் நடத்தப்படப்போவதாக பொலிஸாரின் தொலைபேசிக்கு வழங்கப்பட்ட மர்ம நபரின் தகவலுக்கமைய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து கடும் சோதனைகளுக்கு பின்னரே நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதிக்கப்படுகிறதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை கடந்த வாரம் மட்டக்களப்பு நீதிமன்றில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.