பேய்களால் அச்சுறுத்தல்; 36 ஆண்டுகளாக பெண் வேடத்தில் வாழும் ஆண்!
இந்தியாவின் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆண் ஒருவர், பேய்களால் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி 36 ஆண்டுகளாக பெண் வேடமிட்டு வாழ்ந்து வரும் சம்பவம் குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
3 திருமணங்கள் - 9 பிள்ளைகள்
உலகம் எவ்வளவு தான் முன்னேறினாலும் பல இடங்களில் மூட நம்பிக்கைகளை இன்னும் கடைப்பிடித்துக்கொண்டு வாழும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
உத்தரபிரதேசம் ஜான்பூரை சேர்ந்தவர் சிந்தா. பேய்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்த இவர் பெண் வேடமிட்டு வாழ்ந்தால், ஆவிகளிடம் இருந்து தப்பிக்கலாம் என கருதி உள்ளார்.
அதன்படி சேலை கட்டி கடந்த 36 வருடங்களாக பெண் வேடத்திலேயே வாழ்ந்து வருகிறாராம்.
இவருக்கு 3 திருமணங்கள் நடந்ததாகவும், அதில் 2-வது மனைவியின் மரணத்திற்கு பிறகு ஒரு ஆவி தன்னை தொந்தரவு செய்வதாகவும், அந்த ஆன்மா தன்னை ஒரு பெண் போல வாழ கட்டாயப்படுத்தியதால் அவ்வாறு வாழ்வதாகவும் கூறி வருகிறார்.
அதோடு தனக்கு 9 மகன்கள் பிறந்ததாகவும், அதில் 7 பேர் இறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்த தகவல் வைரலான நிலையில் சிலர், அவருக்கு மனநலம் தொடர்பான பிரச்சினை இருப்பதாக கூறுவதுடன், சிலர், இது மூடநம்பிக்கை, இந்த நபருக்கு சரியான சிகிச்சை தேவை என தெரிவித்துள்ளனர்.