ரஷியாவின் தாக்குதலில் மரியுபோல் நகரில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நேர்ந்த கதி
ரஷியா நடத்திய தாக்குதலில் மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.
அதன்படி தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.
ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
ரஷியா - உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.