எதிர்காலத்தில் நாட்டின் நிலைமை இது தான்....மக்களின் பரிதாப சூழல்
எதிர்காலத்தில் அணைத்து பொருட்களின் விலைகளும் மீண்டும் அதிகரிக்கும் என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை மேலும் தொடருமாயின் மக்கள் மிகவும் பரிதாப நிலைக்கு தான் தள்ளப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்க காலத்தில் எந்த சூழலிலும் அணைத்து பொருட்களும் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன.
ஆனால் தற்போது அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. முன்னாள் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் அத்தியாவசிய பொருட்களின் விலையையும் முதலில் குறைத்தது. அப்போதைய அரசாங்கமும் அரசத்துறை சம்பளத்தை அதிகரித்தது மற்றும் பொது மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் சலுகைகளை வழங்குவதற்கும் பணியாற்றியது. தற்போதுள்ள அரசாங்கமானது பெறுமதிசேர் வரிச்சலுகையை வழங்கியதாக தெரிவித்தார்.
இதனால் பொது மக்களுக்கு ஒரு பயனும் இல்லையென தெரிவித்தார்.