ரியல் பாகுபலி இவர்தான்; ஒற்றை விரலில் 129 கிலோ தூகி சாதனை!
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் (Steve Keeler) என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஸ்டீவ் கீலர் (Steve Keeler) , தன் ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
கின்னஸ் புத்தகத்தின் தகவல் படி, கடந்த பிப்ரவரி மாதம் கென்ட் மாகாணம் ஆஷ்ஃபோர்ட் பகுதியில் தற்காப்புக் கலைஞரான கீலர் (Steve Keeler) இந்த சாதனையை படைத்தார். இது குறித்து ஸ்டீவ் கீலர் (Steve Keeler)கூறுகையில்,
"இது நம்பமுடியாத அளவிற்கு வேதனையானது. ஆனால் என் விரல்கள் வலுவாக உள்ளன. மேலும் எனது வலிமை குறித்து நான் பெருமைப்படுகிறேன்" என்று ஸ்டீவ் கூறினார்.
New record: Heaviest deadlift with one finger - 129.50 kg (285.49 lb) by Steve Keeler (UK)
— Guinness World Records (@GWR) June 10, 2022
Six discs with one finger, just an average morning's work for the martial artist.https://t.co/wCVywqDpTi pic.twitter.com/06WzBGvC1g
48 வயதான ஸ்டீவ் கீலர் (Steve Keeler), கடந்த 4 ஆண்டுகளாக வலிமை பயிற்சி செய்து வருகிறார். ஸ்டீவ் தனது 18 வயதிலிருந்தே கராத்தே விளையாடி வந்தார்.
உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, ஒரு செட் எடையை நடுவிரலால் மட்டும் தூக்கியுள்ளார்.
இதற்கு பிறகே கின்னஸ் உலக சாதனை படைக்க முடிவு செய்து தற்போது அதனை அவர் (Steve Keeler)நிகழ்த்திக்காட்டியுள்ளார்.