தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
நாம் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிடுவதன் மூலம் நம் உடலுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் இந்த ஒரு ஆப்பிளில் கிடைக்கின்றன.
ஆப்பிள் பழத்தை தோல் உரிக்காமல் அப்படியே முழுமையாக தினசரி சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிடும் போதே அதிலுள்ள முழுமையான பலனை எடுத்து கொள்ள முடியும்.
அவ்வாறு நாம் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் போது என்னென்ன நன்மை கிடைக்கும் என நாம் இங்கு பார்ப்போம்.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
ரத்த அழுத்தம் அதிகரிக்கையில் நம் உடலில் செல்லும் ரத்த ஓட்டங்கள் இரத்த நாளங்களை பாதிப்படைய செய்யலாம். மாரடைப்பு மற்றும் வலிப்பு நோய் ஆகியவை இதனால் உண்டாக்கலாம். இதை தவிர்க்க நாம் சில பிரத்தியேக டயட் இருக்க வேண்டி இருக்கிறது. இந்த டயட்டில் கண்டிப்பாக நாம் ஆப்பிளை சேர்த்துக் கொள்ளலாம்
பசி உணர்வை கட்டுப்படுத்தும்
ஆப்பிளில் தண்ணீர் மற்றும் ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கின்றன. இதனால், இது, வயிற்றை நிரப்பும் ஒரு ஆரோக்கிய ஸ்நாக்ஸாக இருக்கிறது. மேலும், ஆப்பிள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். இதனால் அதீத பசி உணர்வு ஏற்படுவதையும், அந்த பசியினால் நாம் அதிகம் சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
அழற்சியை தடுக்கும்
அழற்சி எதிர்ப்பு காரணமாக நம் உடலில் இருக்கும் பாதிப்படைந்த திசுக்கள் சரியாகலாம். இது ஒரு பக்கம் இருந்தாலும் அழற்சியினால் நம் உடலில் நோய் பாதிப்புகளும் ஏற்படலாம். ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால், இந்த அழற்சி எதிர்ப்பை அதிகம் ஆவதிலிருந்து தடுக்கலாம்.
கொழுப்பை குறைக்கும்
உடலில் அதிக கொழுப்பை கொள்வது இதய நோய் பாதிப்புகள் கொண்டு சென்று விட்டு விடும். இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களை கொலஸ்ட்ரால், தடை செய்வதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நாம் கொழுப்பை குறைக்க ஆப்பிள் எடுத்துக் கொள்ளலாம்