தினமும் காலை சீரக தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
காலையில் எழுந்ததும் நம் உடல்நிலை மற்றும் மனநிலை எவ்வாறு இருக்கின்றதோ அதே போன்றுதான் அன்றைய நாள் முழுவதும் உட்சாகப்படுத்தக்கூடியதாக இருக்கும்.
அந்த வகையில் காலையில் எழுந்ததும் உட்சாகத்தையும் ஆற்றலையும் தர கூடிய பெருஞ்சீரக தண்ணீர் தினமும் காலை பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி நாம் இங்கு பார்ப்போம்.
செரிமானத்திற்கு உதவும்
பெருஞ்சீரக விதைகள் ஒருவரின் செரிமானத்திற்கு மிகவும் உதவி செய்கிறது. நம்மில் பெரும்பாலானோர் உணவு சாப்பிட்ட பின் பெருஞ்சீரகத்தை மெல்லும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். ஏனென்றால் இது செரிமானத்தை துரிதப்படுத்துவதோடு சுவாச துர்நாற்றத்தையும் தடுக்கிறது. ஆகவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் பெருஞ்சீரகம் கலந்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன
கண் பார்வைக்கு உதவும்
பெருஞ்சீரகம் ஆயுர்வேதத்தில் நேத்ர ஜோதி என அழைக்கப்படுகிறது. உங்கள் கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் கண்களுக்கு முக்கியமான வைட்டமின் ஏ உள்ளது.
புற்றுநோய் வராமல் தடுக்கும் அற்றல்
சோம்பு புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது. பெருஞ்சீரகத்தில் அனெத்தோல் காணப்படுகிறது. இது மார்பக மற்றும் கல்லீரல் புற்றுநோய் செல்கள் பரவாமல் தடுப்பதிலும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதிலும், அனெத்தோல் பயனுள்ளதாக இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது.
தேவையற்ற கொழுப்பு குறையும்
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு வளர்சிதை பசியைக் குறைக்கிறது மற்றும் மக்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நார்ச்சத்து நிறைந்த விதை உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும்.
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்
பெருஞ்சீரகம் என்னும் சோம்பு உடலின் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்க உதவுகிறது. இதனால், சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் சேரும் நச்சுக்கள் நீக்கப்பட்டு, அதன் ஆரோக்கியம் மேம்படும்.