தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் ; யாழ். பல்கலை மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்!
தமிழ் மக்களுக்காக தன்னுயிரை தியாக தீபம் தியாக தீபம் திலீபனின் 39ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருநாள் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதன்படி, நாளை (25) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் குறித்த போராட்டம் நடைபெறவுள்ளதாக மாணவர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த திலீபனின் நினைவை முன்னிறுத்தியே இந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்குமாறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.