வடிவேலு பாணியில் திருடிய தங்க சங்கிலியை விழுங்கிய திருடன் ; பெண் மீது கொடூர தாக்குதல்
திருடப்பட்ட தங்கச் சங்கிலியை மறைத்து விழுங்கிய நாவலப்பிட்டியைச் சேர்ந்த நபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி - கெட்டபுலாவ பகுதியில் பெண்ணொருவரை காட்டுக்குள் இழுத்துச் சென்று, அவரை தாக்கியதன் பின்னர் அவரின் தங்கச் சங்கிலி மற்றும் கைபேசி என்பவற்றை குறித்த சந்தேகநபர் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எக்ஸ்ரே ஸ்கேன்
பின்னர், பொதுமக்களின் உதவியுடன், பொலிஸார் அவரை ஹபுகஸ்தலாவ பகுதியில் வைத்து கைது செய்தனர். எனினும், அதன்போது சந்தேகநபர் நகையை திருடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட எக்ஸ்ரே ஸ்கேன்களில், திருடப்பட்ட சங்கிலி அவரது வயிற்றில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்தநிலையில், சிறைச்சாலை மருத்துவர்களின் மேற்பார்வையின் கீழ் சங்கிலியை மருந்துகள் மூலமாக வெளியேற்றுமாறு நாவலப்பிட்டி நீதிவான் உத்தரவிட்டதுடன் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.