21 ஆண்டுக்கு முன் தொலைத்த தங்க சங்கிலி; அஞ்சலில் வந்த சர்ப்ரைஸ்!
21 ஆண்டுக்கு முன் எடுத்த நகையை மீண்டும் உரிமையாளருக்கு அஞ்சல் பொதியினூடாக அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு - திருவேகப்புரை பைலிப்புரம் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவர், 21 ஆண்டுக்கு முன், வளாஞ்சேரி பகுதியில் வைத்தியரைச் சந்திக்கச் சென்ற போது, மூன்றரை பவுண் தங்கச் சங்கிலி காணாமல் போனது.
அஞ்சல் பொதியினை பிரித்த போது ஆச்சரியம்
இந்த நிலையில், நேற்று முன்தினம் (06), பெண்ணின் வீட்டுக்கு வந்த அஞ்சல் பொதியினை பிரித்த போது, அவர் ஆச்சரியம் அடைந்துள்ளார். அதாவது, பெயர் எதுவும் குறிப்பிடாமல் வந்த அந்த பொதியில், மூன்றரை பவுண் தங்கச் சங்கிலி இருந்தது.
21 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த தனது மூன்றரை பவுண் தங்கச் சங்கிலியை நான் பயணம் செய்த பகுதிகளில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.
ஒரு வாரம் கழித்துத்தான் தங்கச் சங்கிலி தொலைத்ததை குடும்பத்தினரிடம் தெரிவித்தேன் என குறித்த பெண் தெரிவித்தார்.
எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாதவர் ஒரு கடிதத்துடன் இழந்த தங்கச் சங்கிலிக்குப் பதிலாக அதே அளவுள்ள மற்றொரு தங்கச் சங்கிலிலியை அஞ்சல் பொதியினூடாக அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் முதலில் எங்களால் இதை நம்ப முடியவில்லை. பின்னர் அந்தக் கடிதம் எங்களை நம்ப வைத்தது என அந்த பெண் தெரிவித்துள்ளார்.