இலங்கையில் ஒரு பாலித்த தெவரப்பெரும... பாகிஸ்தானில் ஒரு மலிக் அத்னான்; ஆனால்!
இலங்கையில் தர்காநகர் முஸ்லிம்களுடைய சொத்துக்கள் சிங்கள தீவிரவாதிகளால் சூறையாடப்பட்டபோது தனி ஒருவராக சிங்கள தீவிரவாதிகளுக்கு எதிராக பாலித்த தெவரப்பெரும போராடினார்.
அதற்காக அவருக்கு கிடைத்த சன்மானம் அவருடைய தாயின்மீது அவதூறுகளளை அள்ளி வீசினார்கள் நாட்டுப் பற்றாளர்கள் என தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் சிங்களவர்கள்.
ஆனால் பாகிஸ்தான் சியால்கோட் நகரில் முஸ்லிம் தீவிரவாதிகளால் அநியாயமாக அப்பாவி இலங்கையர் தாக்கப்பட்டபோது தீவிரவாதிகளிடம் இருந்து அப்பாவி இலங்கையரை காப்பாற்ற தனியாக போராடியவர் மலிக் அத்னான். இதற்காக அவருக்கு பாகிஸ்தான் அரசிடம் இருந்து கிடைத்த சன்மானம் 100,000/= அமேரிக்க டாலர் பணமும் ஆயுள்காள ஓய்வூதியமும் மற்றும் பாராட்டுக்கள்.
பாகிஸ்தானில் இடம்பெற்றதும் இலங்கையில் இடம்பெற்றதும் இரண்டுமே ஒரேமாதிரியான அசம்பாவிதங்கள். ஆனால் ஒரு ஆட்சியாளர் (இலங்கை சிங்களவர்) அதனால் காப்பாற்ற முயற்றவர்க்கு எந்தவொரு பாராட்டுக்களோ சன்மானமோ அரசதரப்பில் இருந்து கிடைக்கவில்லை.
இன்னொரு ஆட்சியாளர் (முஸ்லிம் பாகிஸ்தான்) அதனால்தான் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 100,000/= அமேரிக்கா டாலர் மற்றும் அவருடைய மனைவி மக்களுக்கு நெடுங்காள ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
அதோடு அந்தக் குடும்பத்திடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதுடன், முழுப் பாகிஸ்தான் முஸ்லிம்களும் இந்த கொடூரச் செயலுக்கு எதிராக கடுமையான கண்டனத்தினை வெளியிட்டிருந்தனர்.
முகநூலி பதிவிலிருந்து...