பெண்களே அவதானம்; இந்த பொருட்களை மற்றவர்கள் கண்களில் படும்படி வைக்கவே கூடாதாம்!
ஒருவர் கண் போல இன்னொருவர் கண் இருக்காது.சில விஷயங்களை செய்யும் போது அதை மறைத்து தான் செய்தாக வேண்டும்.
நம்முடைய சந்தோஷம் எதுவாக இருந்தாலும் அதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவே கூடாது.
பகிர்ந்து கொள்ள கூடாதவை
நமக்கு கணவர் ஆசையாக வாங்கிக் கொடுத்த பொருள், அல்லது நாம் நம் பிள்ளைகளுக்கு வாங்கி கொடுத்த பொருள் அல்லது நம்முடைய அம்மா அப்பா நமக்காகவே வாங்கி கொடுத்த ஆடம்பர பொருட்கள் என்று தங்கம் வெள்ளி விலை உயர்ந்த ஆடைகள் போன்ற பொருட்களை அடுத்தவர்களிடம் மொத்தமாக காட்டி பெருமைப்பட்டுக் கொள்ளவே கூடாது.
படிப்பு
வீட்டில் குழந்தைகள் நன்றாக படித்து, அழகான கையெழுத்துடன் நோட்டுப் புத்தகங்களை வைத்திருந்தால் அதை மற்ற பிள்ளைகளின் அம்மாவிடமோ அல்லது தெரிந்தவர்களிடமோ பிள்ளை படிப்பை பற்றி உயர்த்தி பேசவே கூடாது.
பணம்
நீங்கள் சேமித்து வைக்கின்ற சேமிப்பு உண்டியல் பணம் இவைகளைப் பற்றி அடுத்தவர்களிடம் பேசக்கூடாது. சேமிப்பு தொகை எவ்வளவு என்பது அடுத்தவர்களுக்கு ஒரு போதும் தெரியவே கூடாது.
அது எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையை கொண்டு வந்து சேர்க்கும். கண் திருஷ்டி படுவது ஒரு பக்கம் இருந்தாலும், பலதரப்பட்ட பிரச்சனைகளில் இருந்து நாம் தப்பிக்க, பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தை பலரோடு பகிர்ந்து கொள்ள கூடாது.
சமையலறை
சமையலறையில் கிலோ கணக்கில் வாங்கி வைத்திருக்கும் பொருட்களை அப்படியே அடுத்தவர்கள் கண்களில் படும்படி வைக்கவே கூடாது.
பூஜை அறை
பூஜை அறையின் அலங்காரத்தை அடுத்தவர்கள் பார்க்க வேண்டும் என்று வீட்டிற்கு வருபவர்களை அழைத்து வந்து சுவாமி அறையை காட்டவே கூடாது.
படுக்கையறை
குறிப்பாக படுக்கையறை கணவன் மனைவி படுத்து தூங்க கூடிய மெத்தை, பாய் தலையணை இவைகளை வெளியில் இருந்து வருபவர்கள் பயன்படுத்த கூடாது.
படுக்கையறைக்கு அனாவசியமாக மூன்றாவது நபரை அழைத்துச் செல்லவே கூடாது.
மிகவும் நெருங்கிய உறவினர்கள் என்று இருந்தால் கூட சில விஷயங்களை அவர்களிடம் சொல்லுவதை தவிர்க்க வேண்டும்.