உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சுமாம் இந்த உணவுகள்
எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் அவசியம். கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் எலும்புகள் பலவீனமாகி, எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.
கால்சியம் எலும்புகளை வலுவாக்குவதோடு மட்டுமல்லாமல் நகங்கள், பற்கள் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் அவசியம்.எனவே உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சி எலும்புகளை வலுவிழக்க செய்யும் உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
உடலில் உள்ள கால்ஷியத்தை உறிஞ்சும் சில உணவுகள்
உணவில் அதிக உப்பு சேர்த்து உட்கொள்வதால் உடலில் கால்சியம் அளவு குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிதல் அபாயம் அதிகரிக்கிறது. அதே போன்று அதிக இனிப்பு சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
சர்க்கரையை அதிகமாக எடுத்துக் கொண்டால், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு கிடைக்காத போது, எலும்புகளில் இருந்து கால்ஷியம் உறிஞ்சப்பட்டு அவை, பலவீனமடைகின்றன.
அதே போன்று காஃபின் உட்கொள்வது பெண்களின் எலும்பு அடர்த்தியையும் குறைக்கும். காஃபின் எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி பலவீனமடையச் செய்கிறது.
கால்சியம் நிறைந்துள்ள சில உணவுகள்
கருப்பு எள்
கருப்பு எள்ளை கால்சியத்தின் சிறந்த ஆதாரம் என்கின்றனர் உணவு நிபுணர்கள். இதனுடன், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பும் இதில் நிறைந்துள்ளது.
தயிர்
தயிரில் உள்ள கால்சியம் எளிதில் ஜீரணமாகி எலும்புகளை வலுவாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது, இது நோயிலிருந்து பாதுகாக்கிறது. உங்கள் அன்றாட உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்.
முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள்
முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் கால்சியத்தால் நிரம்பியுள்ளன என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறூகின்றனர்.
எலும்புகள், நகங்கள், பற்கள், மூளை போன்றவற்றை வலுவாக்க, வெங்காயம்-தக்காளி சேர்த்து சமைத்த பீன்ஸ், கொத்துக்கடலை, உளுந்து, பச்சைப்பயறு, சோளம் போன்றவற்றை அதிகம் சாப்பிடுங்கள்.
பச்சை காய்கறிகள் மற்றும் சட்னி
வெந்தயம், ப்ரோக்கோலி, கீரை, முள்ளங்கி இலைகள் மற்றும் பிற பச்சை காய்கறிகள் கால்சியம் நிறைந்தவை.
புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளின் சட்னியும் நிறைய கால்சியத்தை வழங்குகிறது என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
நட்ஸ் உலர் பழங்கள்
வால்நட்ஸ், அத்திப்பழம், பேரீச்சம்பழம், பேரீச்சம்பழம் ஆகியவை கால்சியம் சத்து நிறைந்தவை.
இதில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் வைட்டமின்களையும் பெறுவீர்கள். இதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.