இவர்கள் ஊரடங்கு உத்தரவுக்கு பொருந்தாதவர்கள்; அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் அதே வேளையில், பொருளாதாரத்தை உயர்த்தவும், நாட்டை முன்னோக்கி நகர்த்தவும் அரசாங்கம் விரும்புவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
அதன்படி அந்தந்த துறைகளுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். ஜப்பானிய பிரதிநிதிகள் குழுவுடன் அமைச்சில் இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
எனவே தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள், சுகாதார வழிகாட்டுதலின் கீழ் இயங்க அனுமதிக்கப்படுவர் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.