டலஸின் ஜனாதிபதி கனவை தவிடுபொடியாக்கியது இவர்களா!
நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பின் போது டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக கூறிய 6 தரப்பினர், அவருக்கு வாக்களிக்கவில்லை என்பது வாக்கெடுப்பு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதனபடி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின தயாசிறி ஜயசேகர தரப்பு, சுயாதீன கட்சிகளின் ஒன்றியம், மனோ கணேசன் தரப்பு, றிசார்ட் பதியூதீன் தரப்பு, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆகிய தரப்பை சேர்ந்த பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக கூறியிருந்தனர் .
எனினும் இறு நேரத்தில் , அவர்கள் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்காது ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்திருனர். இந்த தகவல் வாக்கெடுப்பின் முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளையும், டளஸ் அழகப்பெரும 82 வாக்குகளையும், அனுரகுமார திஸாநாயக்க மூன்று வாக்குகளையும் பெற்றிருந்த நிலையில் இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.