கோடை காலத்தில் சீமை சுரைக்காய் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
கோடையில் கிடைக்கும் சீமை சுரைக்காய் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, மக்னீசியம், பொட்டாசியம், செலினியம் ஆகிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. அழற்சி எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இந்த காயில் காணப்படுகிறது.
சீமை சுரைக்காயில் அதிக நார்ச்சத்து இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இதனால், இதய நோய்கள் நீங்கும். அதுமட்டுமின்றி, இதை அடிக்கடி சாப்பிடுவதால் செரிமான மண்டலம் வலுவடைகிறது.
மலச்சிக்கல்
சீமை சுரைக்காய் சாப்பிடுவதால் வயிற்று பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. வயிறு முழுவதுமாக சுத்தம் செய்யப்படுகிறது, இதன் காரணமாக பருக்கள் மற்றும் வறட்சி போன்ற தோல் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும்.
எடை கட்டுப்படுத்தும்
இது மட்டுமின்றி, சீமை சுரைக்காய் உள்ள நார்ச்சத்து காரணமாக, உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். தேவையற்ற உணவை உண்பதைத் தவிர்ப்பீர்கள், இது உங்கள் எடையையும் கட்டுப்படுத்தும்.
கண்பார்வை மேம்படும்
விட்டமின் ஏ சத்து, சீமை சுரைக்காயில் போதுமான அளவில் உள்ளது. இதன் காரணமாக இது கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சீமை சுரைக்காய் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது கண்பார்வையை மேம்படுத்துவதோடு மற்ற நோய்களைத் தடுப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும்.
நீரிழிவு நோய்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சீமை சுரைக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில், சீமை சுரைக்காயில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது.
அதிக நார்ச்சத்து இருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் சீமை சுரைக்காய் சாப்பிடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
சீமை சுரைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த காய்கறியை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
ஏனெனில், வைட்டமின் சி, மெக்னீசியம், இரும்பு, ரிபோஃப்ளேவின், துத்தநாகம் மற்றும் தியாமின் ஆகியவை காணப்படுகின்றன. இந்த கூறுகள் அனைத்தும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த வேலை செய்கின்றன.