எம்மை எதுவும் செய்ய முடியாது; பைடன் கூற்றுக்கு ரஷ்யா பதிலடி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் வகையில் முக்கிய பொருளாதாரங்களின் G20 குழுவிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் (Joe biden) தெரிவித்த கருத்துக்கு ரஷ்யா பதிலளித்துள்ளது.
ஜோ பைடனின் இந்த கருத்து ரஷ்யாவுக்கு பேரழிவை ஏற்படுத்தாது என்பதே கிரெம்ளினின் கருத்து. ஜி 20 வடிவம் முக்கியமானது, ஆனால் தற்போதைய சூழ்நிலையில், பெரும்பாலான பங்கேற்பாளர்கள் எங்களுடன் பொருளாதாரப் போரில் இருக்கும்போது, பயங்கரமான எதுவும் நடக்காது என ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov)செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் , அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட உலகம் விரிவடைந்து உள்ளது என்றும் கூறியதுடன், மாஸ்கோவை தனிமைப்படுத்தும் முயற்சிகள் தோல்வியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்யாவின் பொருளாதாரத்தை சேதப்படுத்தும் வகையில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அதன் நட்பு நாடுகள் தடை விதித்த பிறகு, சாதாரண ரஷ்யர்கள் சில பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் தட்டுப்பாடுகளை அதிகமாகக் காண்கிறார்கள் எனவும் அவர் (Dmitry Peskov) மேலும் தெரிவித்தார்.