அரச ஊழியர்களுக்கு எந்த வித சலுகைகளும் கிடையாது(Video)
அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களுக்கான எந்த விதமான சலுகைகளும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கான நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார். அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் கிடைத்த வரலாற்றிலேயே ஒரு மிக மோசமான நிலைமை மற்றும் சுமார் நூறு வருடங்களுக்கு ஒருமுறை வருகின்ற ஒரு நெருக்கடி நிலைமை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.