கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகளாம்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல்வேறு உணவுப் பொருட்கள் இயற்கை நமக்கு அளித்துள்ளது.
அதில் ஒன்று தான் உலர் திராட்சை. இந்த உலர் திராட்சையில் பல நிறங்கள் உள்ளன.
அதில் கருப்பு நிற உலர் திராட்சை இனிப்பு பலகாரங்களை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
கருப்பு நிற திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் கருப்பு உலர் திராட்சை.
இந்த சிறிய திராட்சை மிகவும் இனிப்புச் சுவையைக் கொண்டது. பொதுவாக கருப்பு நிற உலர் திராட்சையை வெறுமனே சாப்பிட்டால் நன்மைகள் கிடைக்கும்.
ஆனால் இந்த கருப்பு உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட, இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் இருமடங்கு நன்மைகளைப் பெறலாம்.
இது உடலுக்கு மட்டுமின்றி சருமம், தலைமுடி என ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.
அதுவும் தினமும் 10 நீரில் ஊற வைத்து கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் உடலினுள் பல அற்புதங்கள் நிகழும்.
இப்போது தினமும் ஊற வைத்த கருப்பு நிற உலர் திராட்சையை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
இரத்தத்தை சுத்தம் செய்யும்
கருப்பு உலர் திராட்சையில் சுத்தப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது இரத்த நாளங்களில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
அதுவும் உலர் திராட்சையை நீரில் ஊறு வைத்து உட்கொள்ளும் போது, அதில் உள்ள அத்தியாவசியமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
இதன் விளைவாக இரத்த ஓட்டம் மேம்படும், கல்லீரல் சுத்தமாகும், சருமம் சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.
இதய ஆரோக்கியம் மேம்படும்
கருப்பு நிற உலர் திராட்சையில் பொட்டாசியம், கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன.
இவை இரண்டுமே இதய ஆரோக்கியத்திற்கு ஆதரவளிக்கின்றன.
எப்படியெனில் பொட்டாசியமானது உடலில் சோடியத்தைக் குறைத்து, இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது மற்றும் நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்குகிறது.
எனவே இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால் தினமும் நீரில் ஊற வைத்த 10 கருப்பு உலர் திராட்சையை சாப்பிடுங்கள்.
கண்களுக்கு நல்லது
நீரில் ஊற வைத்த கருப்பு நிற உலர்திராட்சை கண்களுக்கு மிகவும் நல்லது.
எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ப்ரீ ராடிக்கல்களின் தாக்கத்தால் கண்களில் ஏற்படும் சேதத்தைத் தடுப்பதோடு முதுமை காலத்தில் சந்திக்கும் பார்வை தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.
முக்கியமாக இந்த கருப்பு உலர் திராட்சையை உட்கொள்ளும் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், கண்ணாடி அணிய வேண்டிய சூழல் ஏற்படாது.
உடல் பருமனை தடுக்கும்
கருப்பு நிற திராட்சையை நீரில் ஊற வைத்து உட்கொள்ளும் போது, அது உடல் எடையைப் பராமரிக்க உதவுகிறது.
எப்படியெனில் ஊற வைத்த நீருடன் உலர் திராட்சையை உட்கொள்ளும் போது அது பசியை கட்டுப்படுத்தி, தேவையில்லாமல் உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைப்பதோடு, உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்கும்.