விற்பனை நிலையங்களில் பெறுமதியான மின்சாதன பொருட்கள் திருட்டு
மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இரண்டு விற்பனை நிலையங்களின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களைத் திருடிய சந்தேக நபர், மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (25) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் உடஹமுல்ல பிரதேசத்தில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்வேறு பொருட்கள் களவு
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிரிஹான பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 13 மின்விசிறிகள், 5 எரிவாயு அடுப்புகள், 14 ரைஸ் குக்கர்கள் மற்றும் 7 மின் கேத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.