கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட இளைஞன்
இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இச் சம்பவம் தெஹிவளை அபோன்சு மாவத்தை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதால் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த குறித்த நபர் பலத்த காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெஹிவளை அபோன்சு மாவத்தையில் வசித்து வந்த 18 வயதுடைய இளைஞரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 44 வயதுடைய சந்தேகநபர் தற்போது தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.