தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய யுவதியின் சடலம்! வெளியான பரபரப்பு வீடியோ
மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் நேற்று சனிக்கிழமை (13) காலை சடலமாக கரை ஒதுங்கிய யுவதி, மன்னார் பஸ் தரிப்பு நிலையத்தில் இளைஞர் ஒருவருடன் நடந்து வருகின்ற சிசிரிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கடந்த வியாழக்கிழமை (11) மாலை இந்த காட்சிகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த யுவதியும், இளைஞர் ஒருவரும் முகக்கவசம் அணிந்து நடந்து வருகின்ற காட்சி பதிவாகி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை (11) மாலை 7 மணியளவில் மன்னார் பிரதான பாலத்தில் இருந்து பெண் ஒருவர் கடலில் குதித்ததாக நேரில் கண்டவர் மீனவர் ஒருவர் பொலிசாரிடம் தெரிவித்த நிலையில் பொலிஸாரும், கடற்படையினரும் உடனடியாக தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது, எனினும் எவரும் மீட்கப்படவில்லை.
இந்த நிலையில் இன்று சனிக்கிழமை (13) காலை யுவதி ஒருவர் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
எனினும் இது வரை சடலம் அடையாளம் காணப்படவில்லை, சிசிரிவி காட்சியில் உள்ள யுவதியா எனும் கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப் பட்டுள்ளது.