கிளிநொச்சியில் பணிக்கு சென்ற இளம் தாய் வீடு திரும்பவில்லை!
கிளிநொச்சி - முரசுமோட்டை, 2ஆம் கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் தாய் ஒருவரை காணவில்லை என உறவினர்களால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் திருமணமாகி முரசுமோட்டைப் பகுதியில் வசித்து வந்துள்ளார்.
திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்து, குழந்தை ஒன்று உள்ள நிலையில் கடந்த நான்கு மாதங்களாக கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிற்கு வேலைக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த (15.11.2023 தொடக்கம் இவர் வீடு திரும்பவில்லை என்றும் இவரை கண்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் கோரியுள்ளார்கள்.