இந்த நூற்றாண்டின் மோசமான பேரழிவு; தொடர் நிலநடுகத்தால் தவிக்கும் துருக்கி!
துருக்கி நாட்டில் நேற்றே மூன்று முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டதில் நான்காயிரத்திற்கும் அத்திற்கு அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 20 000 ஆகலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.
கட்டிடங்களுக்குள் சிக்கிய மக்கள்
பொதுமக்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களால் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற முடியவில்லை.
இந்நிலையில் இந்த நூற்றாண்டில் துருக்கியில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்றே இதை ஆய்வாளர்கள் பலரும் குறிப்பிடுகின்றனர். இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.
அப்போது அங்குத் துருக்கியின் மத்திய பகுதியை மையமாகக் கொண்டு மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்படி நேற்று மட்டும் 24 மணி நேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
இதற்கிடையே இப்போது மீண்டும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.5ஆகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை ஏற்கனவே, நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மோசமாக உள்ள நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் மேலும் பாதிப்புகளை மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது.