மிக சூட்சுகமான முறையில் தங்கம் கடத்திய பெண் !
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 11 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை நாட்டுக்கு கடத்தி வந்துள்ளார்.
சென்னை வழியாக இலங்கை
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து இந்தியாவின் சென்னை வழியாக இந்த நாட்டுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கைதான சந்தேகநபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஆவார்.
குறித்த பெண்ணின் பயணப் பையில் ரூ. 111,550,000 பெறுமதியான 4,892g 24 கரட் நகைகள் மற்றும் வங்கி பண அட்டைகள் போன்று செய்த 27 தங்கத் தகடுகள், 2,222g தங்க துகள்கள் கொண்ட 8 கெப்ஸியூல்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.