தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை ரூபாயின் பெறுமதி
இலங்கையின் ரூபா மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டின் முன்னணி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளால் இன்று வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் வங்கி, இலங்கை வங்கி, கொமர்ஷல் வங்கி மற்றும் சம்பத் வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 275 ரூபாவாகும். மக்கள் வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 264.33 ரூபாவாகவும் விற்பனை விலை 274.99 ரூபாவாகவும் உள்ளது. இலங்கை வங்கி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் விலை 265 ரூபாவாகவும் விற்பனை விலை 275 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கொள்முதல் விலை US $ 265.00 மற்றும் விற்பனை விலை US $ 275.00 ஆகும்.
சம்பத் வங்கியின் கொள்முதல் விலை 265 அமெரிக்க டொலர்களாகவும் விற்பனை விலை 275 அமெரிக்க டொலர்களாகவும் உள்ளது.