இன்றுகாலை இடம்பெற்ற கோரவிபத்து ; தெய்வாதீனமாக தப்பிய உயிர்கள்
அதிவேகமாக பயணித்த சொகுசு கார் ஒன்று முன்னால் பயணித்த பால் ஏற்றிச் சென்ற பௌசருடன் மோதியதில் கார் பலத்த சேதமடைந்துள்ளது. தாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை ரொசெல்ல பிரதேசத்தில் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில் இருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த சொகுசு கார் கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பௌசரின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் போது காரில் ஒரு சிறு குழந்தை உட்பட 3 பேர் பயணித்துள்ள நிலையில் தெய்வாதீனமாக அவர்களுக்கு விபத்தில் காயம் எதுவும் ஏற்படவில்லை.
இந்நிலையில் கார் சாரதி தூங்கியமையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
