கோட்டாபய கூடாரத்தில் இருந்து வெளியேறும் முக்கிய மூன்று அமைச்சர்கள்
அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூவரும் அமைச்சு பதவிகளை துறப்பதற்கு தயாராகிவிட்டனரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
அடுத்த அமைச்சரவை மறுசீரமைப்பின்போது இம்மூவரையும் அமைச்சரவையில் இருந்து நீக்குமாறும், அமைச்சரவை கூட்டு பொறுப்பை இவர்கள் மீறிவிட்டனர் எனவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் இவர்களை நீக்குவதற்கு அரச தலைமை பச்சைக்கொடி காட்டியுள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தாமாக முன்வந்து பதவி துறப்பதற்கு இம்மூவரும் முடிவெடுத்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.