வடக்கை வென்ற தமிழரசு கட்சி ; முழு விபரம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தில் தனிக்கட்சியாகப் போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
இதேநேரம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஈ.பி.டி.பி ஆகியன குறிப்பிடத்தக்க சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக்கட்சி
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் காணப்படும் 17 உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலனை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரேதச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை, பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை, நல்லூர் பிரதேச சபை ஆகிய 12சபைகளில் முதன்மை பெற்றுள்ளது.
கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைச்சி பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளுராட்சி மன்றங்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ள அதேவேளை, கரைச்சி, பூநகரி ஆகியவற்றில் அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
மன்னார் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளுராட்சி மன்றங்களில் மன்னார் மாநகர சபை, மன்னார் பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழரசுக்கட்சி முதன்மை பெற்றுள்ளது. எனினும் இம்மூன்று சபைகளிலும் ஆட்சி அமைப்பதற்கு அக்கட்சி அறுதிப்பெரும்பான்மையைப் பெற்றிருக்கவில்லை.
முல்லைத்தீவு தேர்தல் மாவட்டத்தில் உள்ள கரைத்துறைப்பற்று பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, மாந்தை கிழக்கு பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் இலங்கைத் தமிழரசுக்கட்சி முன்னிலை பெற்றுள்ளது.